
பயோபிக் படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா
ஏப் 28, 2026
Advertisement
பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்று, ஹாலிவுட் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா, பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ்பெற்ற ஓவியர் அம்ரிதா ஷெர்-கில்லின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தை மீரா நாயர் இயக்குகிறார். அம்ரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பது சிறிய வேடமாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல் என்றும் கூறப்படுகிறது. ராஜமவுலியின் வாரணாசி படத்தில் நடித்து முடித்ததும் இதில் நடிக்கிறாராம் பிரியங்கா சோப்ரா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!