
கல்கி 2 படத்தில் படப்பிடிப்பில் பிரபாஸ்
மே 04, 2026
Advertisement
கடந்த 2024ம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸ் உடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, சோபனா, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், அதில் அமிதாபச்சன் பங்கேற்று நடித்து வந்தார். இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் பங்கேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து இந்த செட்டில் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து பங்கேற்க உள்ளார்கள். மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த தீபிகா படுகோனே இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில், அவர் நடித்த சுமதி கதாபாத்திரத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்கபோகும் நடிகை யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!