கங்கை ஆரத்தி நிகழ்வில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே
அக் 04, 2021
Advertisement
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் ஜோடியாக "பீஸ்ட்" படத்தில் நடிக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா மும்பையில் வசித்து வருகிறார். நேற்று வாரணாசியில் கங்கையில் நடந்த கங்கை ஆரத்தி நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அது சம்பந்தமான வீடியோ, புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார்.
பூஜா அடிக்கடி அவருடைய இந்து மத பக்தியை வெளிப்படுத்தும் விதமாக பதிவுகளையும், புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சில நடிகைகள் தாங்கள் சார்ந்த மதம் பற்றிய பதிவுகளை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால், பூஜா இதுவரை அப்படி எந்த ஒரு தயக்கத்தையும் காட்டியதில்லை. சாதாரணப் பெண் போல அவருடைய பக்தி சார்ந்த பதிவுகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளியிடுவார். இதனால்தான் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்கிறார்கள் டோலிவுட்டில்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!