
விருமன் பட த்தில் மீண்டும் இணையும் பிரகாஷ்ராஜ்
சர்தார் படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கார்த்தி விருமன் படத்தில் நடிப்பதால் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே படக்குழுவினர் பேக்கப் செய்துவிட்டு சென்னை கிளம்பியுள்ளனர். இதனால் கார்த்தி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரகாஷ்ராஜ் அவர் கொடுக்கப்பட்ட கால்சீட்டின் படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாதது தான் இதற்கு காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஒரு படத்திலும் பிரகாஷ் ராஜ் நடிக்கவில்லை.எனவே தான் அவருக்கு பதிலாக தான் சமுத்திரகனி இணைந்தார்.
பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. அவருக்கு எதிராக மோகன் பாபுவின் மகன் நிற்கிறார். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறத. இந்த தேர்தல் காரணமாகவே பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அக்டோபர் 15 முதல் மீண்டும் விருமன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் நடிக்க உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!