
மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பார்த்திபன், “நான் பார்த்திபன்… ராதா கிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன், ஆமாம் நாயுடு பையன். ஆனால், நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கை விட தமிழ் நன்றாக பேசுவேன். இந்தப் படம் வெளிவந்த பிறகு இதன் வெற்றி விழாவில் நிச்சயம் தெலுங்கில் பூர்த்தியாகப் பேசுவேன் என இந்த மூர்த்தி சொல்கிறேன். மூர்த்தி என்பது எனது ஒரிஜனல் பெயர்,” என்றார்.
வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பலர் இருக்கிறார்கள். அதேசமயம், அவர்களது தாய் மொழியில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்களது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவதில் மகிழ்கிறார்கள். அப்படித்தான் பார்த்திபனும் மகிழ்ந்து பேசியுள்ளார். அதில் தனது சாதியையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பார்த்திபனின் குருநாதரான பாக்யராஜ், சாதிப் பெருமையைப் பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பார்த்திபனின் பேச்சும் இப்போது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.
சமீபத்தில் த்ரிஷா பற்றி அவர் பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார் பார்த்திபன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!