
தமிழக டிராமா... ஜிடி நாயுடுவை பார்த்து கத்துக்கிட்ட பில்கேட்ஸ்... ஜிடிஎன் பட விழாவில் மாதவன் பேச்சு
தமிழகத்தில் நிறைய டிராமா (உதயநிதி கைது) நடக்குற நேரத்துல நீங்க (பத்திரிகையாளர்கள்) இங்க வந்து எங்க கூட இருக்கீங்க, நன்றி. எங்க வாழ்க்கையில இது ஒரு பெரிய டிராமாவா இருக்கு. ஜி.டி. நாயுடுன்னு ஒரு கதாபாத்திரத்தை பத்தி உலகத்துக்கு சொல்றதுக்கு ஒரு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. அதை சரியாக பொறுப்போட சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். அதை சொதப்பி விட்டால் அதன் பாதிப்பு வேறு மாதிரி இருக்கும்.
இவரோட வாழ்க்கை கதை ஏன் என கேட்கலாம். இன்னைக்கு நடக்குற பல விஷயங்களை அவர் அன்னைக்கே பண்ணிட்டாரு. ஊபர்ங்கற விஷயம் இப்பதான் நமக்கு தெரியும், அதை அவரு அப்பவே 80 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டாரு. அந்த மாதிரி பல விஷயங்கள் இந்த படத்துல நீங்க பாக்க போறீங்க. பில் கேட்ஸே இவரை பார்த்துதான் கத்துக்கிட்டாரா? அப்படிங்கிற ஒரு பீலிங்கே நமக்கு வரும். ஏன்னா பில் கேட்ஸ் செஞ்ச பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார்.
அவர் பண்ணிய விஷயங்கள், அவரது கண்டுபிடிப்புகள் 10 சதவீதம் தான் படத்தில் இருக்கும். ஆனால் அவர் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்தார் என்பதை சொல்லி இருக்கோம். பாலிடெக்னிக்னு ஒரு வார்த்தை என்னன்னு இவரால்தான் நமக்கு தெரியுது. பாலிடெக்னிக்கை இன்வென்ட் பண்ணதே இவர்தான்.
இப்படிப்பட்டவரின் கதையை ஏன் இவ்வளவு காலம் பொத்தி வச்சிருக்காங்கங்கிறது தான் எனக்கு புரியல. அவரின் முழு கதையைக் கேட்கும்போது நான் மிரண்டு விட்டேன். இன்னைக்கு இருக்கிற ஸ்டார்ட்-அப்ஸ் விஷயங்கள் எல்லாம் அவர் அப்பவே செஞ்சு வச்சிருக்காரு. என்னைக்கும் அவர் பிரிட்டிஷ்காரன் முன்னாடி தலை குனியவே இல்லை. பிரிட்டிஷ்காரங்க ஜி.டி. நாயுடுவை ஜெயிக்கவே முடியலை. கடைசி வரைக்கும் அவங்க நாட்டை விட்டு ஓடுற வரைக்கும், அவங்களால ஜி.டி. நாயுடுவுக்கு ஒண்ணுமே செய்ய முடியல.
ஆனால் அதுக்கப்புறம் வந்த பிரச்சனை தான் இன்னமும் வருத்தமா இருந்துச்சு. நம்ம ஆளுங்களே போட்டு அவரை ஸ்டாப் பண்ணிட்டாங்க. இல்லாவிட்டால் அந்த காலத்திலேயே ஒரு மிகப்பெரிய கம்பெனி கோயம்புத்தூருக்கு வந்து, இன்னைக்கு கோயம்புத்தூரோட கதையே வேற மாதிரி இருந்திருக்கும், இந்தியாவோட கதையே வேறையா இருந்திருக்கும்.
இவ்வாறு பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!