
பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர்
ஜூன் 05, 2023
Advertisement
தமிழில் சினிமா போன்றே வெப் தொடர் தயாரிப்பதும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது தயாராகும் வெப் தொடர் "பானி பூரி". லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கைஹா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நவ்நீத் சுந்தர் இசையமைக்கிறார், பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் தொடரை புல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஆர்ட்டிபிசியில் இண்டலிஜன் என்கிற செயற்கை துண்ணறிவு பின்னணியில் உருவாகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு இடையில் இது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மாதிரியான கதை. 8 எபிசோட்கள் கொண்ட தொடராக உருவாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!