
ஜுன் 9ம் தேதி போட்டியில் போர் தொழில், டக்கர்
கடந்த வாரம் ஜுன் 2ம் தேதி ஐந்து படங்கள் வெளியான நிலையில், இரண்டு படங்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி நிலவியது. இந்த வாரம் ஜுன் 9ம் தேதி வெளியாகும் படங்களிலும் இரண்டு படங்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் மற்றும் பலர் நடித்துள்ள "போர் தொழில்", கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா மற்றும் பலர் நடித்துள்ள "டக்கர்" ஆகிய படங்களுக்கு இடையில்தான் நேரடி போட்டி. இவற்றோடு வேறு சில படங்களும் வெளியாகலாம்.
மேலும், தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் சமுத்திரக்கனி நடித்த "விமானம்", ஆங்கிலத்தில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் "டிரான்ஸ்பார்மர்ஸ் - ரைஸ் ஆப் த பீஸ்ட்ஸ்" ஆகிய படங்களும் வெளியாகின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!