சிங்கம் 4 பற்றி காலம் தான் பதில் சொல்லும் : ஹரி விரக்தி
மார் 22, 2024
Advertisement
இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் வெளியான "சிங்கம்" படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்றை 3வது பாகம் பெறவில்லை. இதனால் அதன் நான்காம் பாக கதை தயாராக இருந்தும் சூர்யா நடிக்காமல் ஒதுங்கினார். ஹரி, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிங்கம் 4 கைவிடப்பட்டது.
இதுகுறித்து ஹரி கூறியிருப்பதாவது: நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றித்தான் கேட்கிறார்கள். சிங்கம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த படம். அதனால் அடுத்த படத்திற்கு அதிக உழைப்பும், யோசிப்பும் வேண்டும். எனக்கும் சூர்யாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அருவா கதை அப்படியே இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். சிங்கம் 4 பற்றி காலம்தான் பதில் சொல்லணும். நான் இப்போது ரத்னம் படத்தில் பிசியாக இருக்கிறேன். எனது வழக்கமான பாணியிலான பக்கா ஆக்ஷன் படம் இது. விஷால் இதில் வேற மாதிரி வந்து நிற்பார். என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!