
இளம் ராஜாவாக மாறிய தனுஷ்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம் அவரின் முந்தைய படங்கள். வசந்த் ரவி நடித்த "ராக்கி", செல்வராகவன் நடித்த "சாணி காயிதம்", தனுஷ் நடித்த "கேப்டன் மில்லர்" படங்கள் வன்முறை நிறைந்ததாக இருந்தது. இப்படியான படங்களை இயக்கியவரால் இளையராஜா வாழ்க்கை கதையை இயக்க முடியுமா என்று கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தில் தனுஷ் இளையராஜாவாக தோன்றும் ரசிகர்கள் உருவாக்கிய பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சில பாராட்டுகளை அள்ளி வருகிறது. அவற்றில் ஒன்று இளையராஜா இளம் வயதில் இசை அமைக்கும் கருப்பு வெள்ளை படம். மீசை அரும்பாத வயதில் அவர் பெரிய ஜாம்பவான் போன்று கை அசைத்து இசையை ஒருங்கிணைப்பு செய்யும் இந்த படம் புகழ்பெற்றது. அந்த படத்தை போன்றே 90 சதவிகித ஒற்றுமையுடன் வெளியாகி உள்ள தனுஷ் படம் வைரலாக பரவி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!