
ஒரே திரையில் இரண்டு படங்கள்: தமிழ் இயக்குனரின் புதிய முயற்சி
படத்தை பற்றி இயக்குனர் ஜெகன் வித்யா கூறியதாவது: ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை "ஸ்பிலிட் ஸ்கிரீன்" என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும், கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணையும், இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி என்று சொல்லலாம். என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!