ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி
ஜூலை 22, 2025
Advertisement
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜாக்சன்துரை, வெப்பம் போன்ற படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக, பல படங்களில் அவர் கண்களை பார்த்து ரசித்தவர் பலர். சில ஆண்டுகளாக அவர் காணாமல் போய் இருந்தார். இப்போது மு.மாறன் இயக்கும் ‛பிளாக்மெயில்" படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடி தேஜூ அஸ்வினி. ஆகவே, பிந்து மாதவி ஹீரோயின் இல்லை என தெரிகிறது.
அவரும் பட விழாவில் நான் ஒரு அர்த்தமுள்ள கேரக்டரில் நடிக்கிறேன் என்று பேசியிருந்தார். பிளாக்மெயில் சம்பந்தப்பட்ட கதையில் அவர் பாதிக்கப்பட்டவராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்திரிகா என இன்னொரு நடிகையும் நடித்து இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்த சந்திரிகா இதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேய் ஆக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!