
ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி
தமிழில் அயோத்தி தவிர, உறியடி விஜயகுமார் நடித்த எலெக்ஷன் படத்திலும் ஹோம்லியாக நடித்து இருந்தார். தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவர் இப்போது கவின் நடிக்கும் ‛கிஸ்" படத்திலும், எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கும் ‛கில்லர்" படத்திலும் மார்டன் வேடத்தில் நடிக்கிறார். அந்த அஸ்ராணியா இது என்று பலரும் கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றம் மாறியுள்ளது.
‛அயோத்தி" படத்துக்குபின் சில படங்களில் நடித்துவிட்டார் சசிகுமார். ப்ரீத்தி அஸ்ராணியும் அப்படியே. ஆனால், அந்த படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இன்னமும் அடுத்த படம் பண்ணவில்லை. ஹீரோவுக்கு வெயிட் பண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!