
தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன்
செப் 26, 2023
Advertisement
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் ‛வெப்பம், ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைகோ, திருச்சிற்றம்பலம்"" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‛‛தெலுங்கு சினிமாவில் இதுவரை எனக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால் தமிழில் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ ஒருவர் என்னை துன்புறுத்தினார்"" என கூறியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. அதேசமயம் எந்த ஹீரோ என நித்யா மேனன் குறிப்பிடாததால் தமிழில் அவர் நடித்த படங்களின் ஹீரோக்களை பட்டியலிட்டு யாராக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபற்றி நித்யா மேனனை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‛‛அதுபோன்று ஒருபோதும் நான் எதுவும் சொல்லவில்லை, தவறான தகவல்"" என விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி நித்யா மேனனை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‛‛அதுபோன்று ஒருபோதும் நான் எதுவும் சொல்லவில்லை, தவறான தகவல்"" என விளக்கம் அளித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!