
பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா?
செப் 26, 2023
Advertisement
தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து முடித்துள்ள "சலார்" படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது அல்லாமல் நாக் அஸ்வின் இயக்கத்தில் "கல்கி 2898 ஏடி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இது உலகப்போர் பின்னனியில் நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறது என்கிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!