
நிஷா - கணேஷ் தம்பதிக்கு ஆண் குழந்தை
அக் 04, 2023
Advertisement
சின்னத்திரை பிரபலமான நிஷா சீரியல்களில் நடித்ததுடன் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷாவுக்கு சமைரா என்ற பெயரில் 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான அவருக்கு நேற்றைய தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், "நான் நிறைய ரோல்களை செய்திருக்கிறேன். ஆனாலும், அப்பா என்கிற ரோலை எதனுடனும் ஒப்பிட முடியாது" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தன் மகனின் விரல்களை பிடித்த படி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கணேஷ் - நிஷா தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…