
மழை பாடல்களைத் தவிர்க்கும் நிதி அகர்வால்
தமிழில் "பூமி, ஈஸ்வரன்" படங்களில் நடித்த நிதி அகர்வால் மழைப் பாடல்களில் நடிப்பது பிடிக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “மழைப் பாடல்களில் நடிப்பது சுலபமானதல்ல. முழுவதுமாக நனைந்து, பின்னர் நம்மை உலர வைத்து, மீண்டும் நனைவது மிகவும் கடினமானது. மேலும், தண்ணீர் பொழியும் போது நம் கண்களைத் திறந்து கொண்டு நடிப்பது சவாலா ஒன்று. அதனால், மழைப் பாடல்களில், நடிப்பது பற்றி எண்ணம் தற்போது இல்லை,” என்கிறார்.
நிதி அகர்வால் தற்போது உதய்நிதி ஜோடியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!