
விஜய்க்கு அவரது சிலையை பரிசளித்த கன்னட ரசிகர்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விஜய் பெயரில் கட்சியைப் பதிவு செய்து சர்ச்சைக்கு உள்ளானார் விஜய்யின் அப்பா. புதிதாகப் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இதுவரை விஜய் சந்தித்து கொரானோ நிவாரண நிதி வழங்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு வந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் விஜய்யிடம் நற்பெயரை வாங்குவதற்கு பரிசுகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது- கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய்யின் ஆளுயர சிலை அவருக்கு பரிசளித்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் அந்த சிலை பற்றிய செய்தி வைரலாகப் பரவி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!