
விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்!
அக் 29, 2025
Advertisement
நடிகர் விக்ரம் நடித்து கடைசியாக திரைக்கு வந்த படம் "தங்கலான்". இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே விக்ரம் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் மடோன் அஸ்வின் வெளியேறினார் என தகவல் வெளியானது. இன்னும் இந்த படத்திற்கான இயக்குனர் யார் என்பது அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தை ஒரு குறும்படத்தை இயக்கி பெயர் பெற்ற அறிமுக இயக்குனர் ஒருவர் தான் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!