
ஜெயிலர் படப்பிடிப்புக்கு நடுவே கத்தார் சென்ற இயக்குனர் நெல்சன்
டிச 03, 2022
Advertisement
விஜய் நடித்த பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார் நெல்சன். அது குறித்த புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!