
பாபா படத்தின் புதிய டிரைலரை வெளியிட்ட ரஜினி!
தற்போது பாபா திரைப்படம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது.ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாபா படத்தின் புதிய காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி முடித்திருந்தார்.
இந்நிலையில் பாபா படத்தின் புதிய டிரைலரை ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் யூடியூபில் வைரலாகி வருகிறது .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!