5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வந்த நீது சந்திரா
நவ 23, 2022
Advertisement
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் நீது சந்திரா. அதன்பிறகு தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3, படங்களில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தார். 5 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வரும் படம் "ஒன் டூ ஒன்" படத்தில் நடிக்கிறார். இதை திருஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி, சுந்தர்.சி மனைவியாக நடிக்கிறார். அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். இதில் இப்போது நீது சந்திரா இணைந்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!