மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜூலை 13, 2024
Advertisement
ஆர்.ஜே.பாலாஜியும், அவரது நண்பர் சரவணனும் இணைந்து இயக்கிய படம் "மூக்குத்தி அம்மன்". 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். அவருடன் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்பட பலர் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்ஜே பாலாஜி கூறி வந்தார். ஆனால் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க மறுப்பதாகவும், அதிக சம்பளம் கேட்பதாகவும், அதனால் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் "மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்" அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த படத்தை ஜசரி கணேசுடன் இணைந்து நயன்தாராவும் தயாரிக்கிறார். இதில் மூக்குத்தி அம்மன், அவரது பக்தை என இரு வேடங்களில் நயன்தாரா நடிப்பதாக தெரிகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…