
தெலுங்கில் அறிமுகமாகும் சிவராஜ்குமார் : ராம் சரணுடன் நடிக்கிறார்
ரஜினியின் "ஜெயிலர், தனுஷின் "கேப்டன் மில்லர் படங்களின் மூலம் சிவராஜ்குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடிகராக அறிமுகமாகிறார். சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி ராம்சரண் மற்றும் சிவராஜ் குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு ஸ்டார்களையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!