வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!
Advertisement
Advertisement
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!
நவ 14, 2022
அ நிறம் | அளவு
Advertisement
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்". இப்படத்தில் அவருடன் பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நகைச்சுவை கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் சிங்கிள் பாடல் நவம்பர் 14ம் தேதியான இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள அப்பத்தா என்று தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுதி இருக்கிறார். வடிவேலு பாடி நடித்துள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!