
திருமண வீடியோ உரிமையை விற்றாரா ஹன்சிகா?
அந்தத் திருமண வீடியோ உரிமையை ஓடிடி தளத்திற்கு ஹன்சிகா விற்றுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவரது திருமண வீடியோ உரிமையை இப்படித்தான் ஒரு ஓடிடி தளத்திற்கு 25 கோடிக்கு விற்றதாக ஒரு தகவல் பரவியது. அவ்வளவு கோடிக்கு விற்றாரா என்பது வெளியாகவில்லை என்றாலும் திருமண வீடியோ ஓடிடி தளத்தில்தான் வெளியானது. தற்போது நயன்தாரா வழியில் ஹன்சிகாவும் தனது வீடியோ உரிமையை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.
தங்களது சமூக வலைத்தளங்களில் சில "பிராண்ட்"களின் பொருட்களை விளம்பரப்படுத்த ஒரு பதிவுக்கு லட்சக் கணக்கில் பணம் வாங்கிப் பதிவிடும் சினிமா பிரபலங்கள் இருக்கிறார்கள். இப்போது தங்களது தனிப்பட்ட திருமண நிகழ்வுகளைக் கூட பல கோடிக்கு விற்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!