இசையமைப்பாளரான இயக்குனர் : நடிகரான பிரபுதேவா மகன்
மார் 19, 2026
Advertisement
பிரசாந்த் நடித்த ‛கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு", கார்த்தி நடித்த ‛சந்தித்தவேளை" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரவிச்சந்திரன். கடைசியாக 2019ல் நட்பதிகாரம் என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். ‛‛முதன் முதலாய்"" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடி உள்ளார். இந்த பாடலின் புரொமோ வீடியோ இன்று மாலை வெளியானது. முழு பாடல் நாளை வெளியாகிறது.
இதுபற்றி ரவிச்சந்திரன் கூறுகையில், ‛‛ஆரம்பத்தில் இருந்தே இசை மீது ஆர்வம் இருந்தது. படங்களுக்கு இசையமைப்பதாக இது ஆரம்பமானது. அப்படியே ஆல்பமாக வெளியாகி உள்ளது. நானே பாடல் வரிகளையும் எழுதி உள்ளேன். அடுத்து படங்களுக்கும் இசையமைக்க போகிறேன். பிரபுதேவா மகன் ரிஷி இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல பாடல்களையும், படங்களும் இயக்குவேன்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!