படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர்
பிப் 13, 2026
Advertisement
மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன்பிறகு ஹாய் நானா, பேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் டகாய்ட் ; லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இது தவிர அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது ஹிந்தியில் ஹை ஜவானி இஸ்க் கோனா ஹை என்கிற படத்தில் நடித்து வருகிறார் மிருணாள் தாகூர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பும்போது வரிசையாக பல விலை உயர்ந்த கார்கள் அங்கே இருந்தும் கூட அவற்றை ஒதுக்கி விட்டு அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து தனது உதவியாளருடன் அதில் பயணித்து தனது வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார் மிருணாள். ஒரு மன மகிழ்ச்சிக்காக, ஒரு மாற்றமாக தான், ஆட்டோவில் சென்றுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!