கங்கனா குடியிருப்பை வாங்கிய மிருணாள் தாகூர்
பிப் 21, 2024
Advertisement
""சீதா ராமம், ஹை நான்னா” தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். தமிழில் சில படங்களில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தற்போது மும்பையில் இரண்டு குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு அபார்ட்மென்ட் குடியிருப்புகளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குடும்பத்தினருக்கு சொந்தமானதாம். கங்கனாவின் அப்பா, சகோதரருக்குச் சொந்தமான அந்த குடியிருப்புகளை மிருணாளும், அவரது அப்பா பெயரிலும் வாங்கியிருக்கிறார்கள்.
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள அந்த இரண்டு குடியிருப்புகளின் விலை 10 கோடி என்கிறார்கள். அதே குடியிருப்பில் தற்போது மிருணாள் வசித்து வருவதால் மிருணாள் எளிதில் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியிருக்கிறார்கள். அந்த பழைய குடியிருப்பை புதுப்பிக்கும் வேலைகளில் மிருணாள் குடும்பத்தினர் இறங்கியிருக்கிறார்கள்.
மிருணாள் தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக "பேமிலி ஸ்டார்" படத்தில் நடித்து வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!