பர்ரோஸ் - இயக்கத் தயாராகும் மோகன்லால்
பிப் 18, 2021
Advertisement
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்துள்ள "த்ரிஷயம் 2" நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் "சாட்" செய்தார். அப்போது தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை அவர் வெளியிட்டார்.
தான் இயக்குனராக அறிமுகமாகும் "பர்ரோஸ் - கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷர்" (Barroz : Guardinan Of D"Gama"s Treasure) படம் தான் தன்னுடைய அடுத்த படம் எனத் தெரிவித்தார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருந்தது. குழந்தைகளைக் கவரும் விதத்தில் 3 டியில் இப்படம் உருவாக உள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்க ரியலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளார். படம் குறித்து ஒரு வருடத்திற்குப் பிறகு மோகன்லாலை சந்தித்தது பற்றி லிடியன் அவருடைய டுவிட்டர் தளத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சினிமா உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ள படம் இது என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!