
ஷங்கருக்கு செக் வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்
அந்த தில் ராஜுவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்க, ராம் சரண் நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தார்கள். படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜு போட்ட ஒப்பந்தம் தான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் ஷங்கரின் படங்கள் பொதுவாக பிரம்மாண்டமாகவும், பெரிய பட்ஜெட்டிலும் தான் தயாராகும். அதைப் போலவே இந்தப் படத்திற்கும் பெரிய பட்ஜெட்தான் கொடுத்தாராம். ஆனால், குறிப்பிட்ட அந்த பட்ஜெட்டிற்கு மேற்கொண்டு ஒரு பைசா கூட தரமாட்டேன் என தில் ராஜு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு ஷங்கருக்கு "செக்" வைத்துவிட்டாராம்.
இப்படியே எல்லா தயாரிப்பாளர்களும் ஒப்பந்தம் போட்டால் அது திரையுலகத்தை வாழ வைக்கும் என தெலுங்கில் கிசுகிசுக்கிறார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!