
திரிஷ்யம் 3 படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால்
டிச 02, 2025
Advertisement
மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 10 வருடங்களில் அடுத்தடுத்து வெளியான "திரிஷ்யம்" படத்தின் இரண்டு பாகங்களும் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பாலிவுட்டில் கூட இந்த இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டு மூன்றாவது பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி கேரளாவில் "திரிஷ்யம் 3" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மோகன்லாலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!