அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ஜி
பிப் 28, 2023
"பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் ‛பகாசூரன்". செல்வராகவன், நட்டி எனும் நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை இந்தப்படம் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்...” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே மோகன்ஜி இயக்கத்தில் வெளியான ‛திரெளபதி, ருத்ர தாண்டவம்" படங்களில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!