
ஆண், பெண் சமம் அல்ல - நடிகர் சதீஷ்
இப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் சதீஷ், ‛‛பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இதிலிருந்து ஒதுங்கினேன். இதுபற்றி சில கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதே விஷயத்தை பேச சொன்னார் அந்த கல்லூரி முதல்வர். எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக பெண்களும் இந்த வஷயத்தில் வளர்ந்து வருகிறார்கள் என்றார். என்னை பொருத்தமட்டில் ஆண், பெண் சமமானவர்கள் அல்ல. ஆண்களை விட பெண்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள். அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!