
மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக புதிய படம் அறிவிப்பு
பிப் 07, 2024
Advertisement
90, 2000 காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். சமீபத்தில் மாஸ்டர், மாறன், லேபிள் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கின்றார். இதில் கதாநாயகியாக ஜீவிதா என்பவர் நடிக்கின்றார். சனா ஸ்டுடியோஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தபடம், சர்வைவல் த்ரில்லராக உருவாகிறது. சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!