
ஓடிடியிலும் ஒரே நாளில் அயலான், கேப்டன் மில்லர் போட்டி
தியேட்டர் வெளியீட்டில் ஏற்பட்ட போட்டி, இப்போது ஓடிடி தளத்திலும் வரப் போகிறது. இரண்டு படங்களுமே நாளை(பிப்., 9) ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. "கேப்டன் மில்லர்" படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், "அயலான்" படம் எத்தனை மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து சரியாக அறிவிக்கப்படவில்லை. தமிழில் மட்டும் வெளியாகிறது என்பது மட்டும் உறுதி.
"அயலான்" படம் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக தெலுங்கில் இதுவரை வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைக் கூட தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை.
தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஓடிடியில் படம் நேரடியாக வெளியாகுமா என்று கேட்டு வருகிறார்கள். அதற்கு படக்குழுவினர் கூட எந்தவித பதிலையும் சொல்லவில்லை. தெலுங்கில் "அயலான்" படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. டிரைலருக்கு 5 மில்லியன் பார்வைகள் கிடைத்தது. அப்படிப்பட்ட வரவேற்பை வசூலாக மாற்ற படக்குழு தவறிவிட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!