‛மார்கழி திங்கள் அக்.,20ல் ரிலீஸ்
அக் 05, 2023
Advertisement
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் முதல் முறையாக இயக்கும் திரைப்படம் "மார்கழி திங்கள்". இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஷாம் செல்வன், நக்ஷா சரண் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து, வில்லனாகவும் நடித்து வருகிறார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு விஜய் நடித்த "லியோ" திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!