
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் மலையாள நடிகை
பிப் 27, 2024
Advertisement
மாமன்னன் படத்தை அடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதையடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. இந்த படத்தை 80 நாட்களில் படமாக்கி முடிக்கவும் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மலையாளத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெயஹே என்ற படத்தில் நாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தமிழில் கவண், இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!