
நீச்சல் உடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்
இந்நிலையில் மாளவிகா தற்போது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களை மாளவிகா பகிர்ந்துள்ளார். மற்றொரு பதிவில் ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளம் அருகே பச்சை நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து ஸ்டைலாக கிளாஸ் அணிந்து, படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, ஹாயாக உலா வருவது மாதிரியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ‛‛பச்சை நிறமே பச்சை நிறமே.... இச்சை மூட்டும் பச்சை நிறமே..."" என கவிதை வாசித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…