ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா?
ஜூன் 30, 2022
Advertisement
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம், "மஹா". சோலோ ஹீரோயினை கதை களமாக கொண்ட இந்த படத்தில் நட்புக்காக சிலம்பரசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இணைந்து தயாரித்துள்ளனர்.
சிம்பும், ஹன்சிகாவும் நிஜத்தில் காதலித்து பிரிந்தவர்கள் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும் தயாரிப்பாளருக்கு இருந்த சில பிரச்சினைகள் காரணமாக படம் வெளிவரவில்லை. படம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது 50வது படம் வெளிவரவில்லை என்று ஹன்சிகாவும் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 22ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டு விநியோக உரிமையை ஆன்ஸ்கை என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்தமுறையாவது படம் வெளியாகுமா... பொருத்திருந்து பார்க்கலாம்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!