
மாமன்னன் படத்தின் முதல் பார்வை அப்டேட்!
ஏப் 29, 2023
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால்,உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வேகமாக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. உதயநிதி நடிப்பில் வெளியாக உள்ள கடைசிப்படம் இதுவாகும். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று காலையில் அறிவித்தனர். அதன்படி, இந்த படத்தின் முதல் பார்வை வரும் மே 1 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!