
மண்டாடியை பாராட்டிய மாதவன்
அக் 18, 2026
Advertisement
சமீபத்தில் நடிகர் சூரியின் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான ‛மண்டாடி" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. கடற்கரை கதைக்களமாக கொண்டு அதில் பாய்மரப்படகு போட்டி என்கிற வித்தியாசமான பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதில் நட்பு துரோகம் எல்லாம் கலந்து ஒரு அழகான ஆக்சன் ட்ராமாவாக இந்த படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. படத்தில் நடித்த சூரி மட்டுமல்ல வில்லனாக நடித்த நடிகர் சுகாஷூம் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் மண்டாடி வெளியானது. இதில் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மாதவன் தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். “மற்றும் ஒரு தமிழ் சினிமாவின் வைரம்” என இந்த படத்தை புகழ்ந்துள்ள மாதவன் “என்ன ஒரு படம்.. என்ன ஒரு ஒளிப்பதிவு.. அருமையான கதை சொல்லல் மற்றும் இயக்கம், நடிப்பு.. எனது சகோதரன் சூரி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவிற்கும் தலைவணங்குகிறேன்” என்று வெகுவாக புகழ்ந்துள்ளார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!