மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம் - மன்னிப்பு கேட்ட ஆர்கே சுரேஷ்
ஏப் 22, 2022
Advertisement
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். வருகின்ற மே 20 ம் தேதி வெளியாக இருந்த இப்படம் தற்போது ரிலீசே தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்கே சுரேஷ் மாமனிதன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமைகளை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் .
ரிலீஸ் மாதம் குறித்து ஆர்கே சுரேஷ் பகிர்திருக்கும் பதிவு, "விஜய் சேதுபதி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால், "மாமனிதன்" படத்தின் வெளியீடு மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட "மாமனிதன்" தகுதியான படம். அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!