எம்.குமரன் ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி
மார் 21, 2025
Advertisement
ராஜா(மோகன் ராஜா) இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ரவி மோகன்(ஜெயம் ரவி), அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் "எம் குமரன் S/o மகாலட்சுமி". தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" படத்தின் ரீமேக்காக வெளிவந்த படம்.
ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்றபடி படத்தை மாற்றியமைத்து சிறப்பான படமாகக் கொடுத்திருந்தார் ராஜா.
20 வருடங்களுக்குப் பிறகு அப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தில் ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நதியா இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “எனக்குப் பிடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி… என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது. எல்லா வயதினரையும் கவர்ந்த மறக்க முடியாத ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு இனிய அனுபவமாக இருந்தது” என குழுவினருக்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!