
குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி
குட் பேட் அக்லி-யின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் அஜித் நடித்த பல படங்களை இந்த நிறுவனமே கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி-யில் ஒளிபரப்பாகும் நாளை அவரது பிறந்த நாளான மே மாதம் 01-ந்தேதி அல்லது மே மாதம் முதல் வாரத்திலேயே வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகவும் அதிரிச்சியில் உள்ளனர். படம் வெளியாகி ஒரு மாதத்திலே ஓடிடி தளத்தில் வெளியாவதை ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பாத நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பாகும் தேதியை மாற்றி அமைக்கலாமா என்ற யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!