தமிழில் வெளியாகும் லக்கி பாஸ்கர்
ஏப் 12, 2024
Advertisement
"மகாநடி" மற்றும் "சீதா ராமம்" படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படம் "லக்கி பாஸ்கர்". வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு வங்கி கேஷியர் அந்த வங்கியையே கொள்ளை அடிக்க திட்டமிட்டால் எப்படி இருக்கும் என்பது படத்தின் கதை. கொள்ளை என்றால் நேரடியாக இல்லாமல் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என்பது மாதிரியான கதை. தெலுங்கில் தயாரானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!