
துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர்
ஜூலை 29, 2023
Advertisement
மலையாள நடிகரான துல்கர் சல்மான், தந்தை மம்முட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களை விடவும் பிற மொழிகளிலும், பான் இந்தியா படங்களிலும் அதிகம் நடிப்பவராக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான "சீதா ராமம்" படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். படத்திற்கு "லக்கி பாஸ்கர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தனுஷ் நடித்த "வாத்தி" படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை "ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்கள்" என்று அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!