
100வது நாளை தொட்டது லவ் டுடே
ஜெயம்ரவி நடித்த "கோமாளி" படத்தை இயக்கி பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார். சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியான இந்த படம் இன்று (பிப்.11) 100வது நாளை தொட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரிலும், அண்ணாநகர் பிவிஆர் தியேட்டரிலும் தொடர்ந்து 100 நாள் ஓடியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இரண்டாவது ரவுண்ட் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!