லியோ - அமெரிக்காவில் ஐமேக்ஸ் பிரிமியர் ஷோக்கள் ரத்து
அக் 14, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "லியோ" படம் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாக உள்ளது என இரண்டு தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அமெரிக்காவில் இப்படத்தின் ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகள் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்று நடத்துவதாக இருந்தது. அதற்கான முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அக்காட்சிகள் ரத்தாகியுள்ளன, முன்பதிவுக்கான பணத்தையும் திரும்ப வழங்கி வருகிறார்கள்.
ஐமேக்ஸ் வடிவ பிரதியை குறித்த நேரத்தில் தராததே அதற்குக் காரணம் என்கிறார்கள். இதனால், ஐமேக்ஸ் தியேட்டர்களில் படத்தைப் பார்க்க ஆவலுடன் முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதனால், அவர்கள் உடனடியாக மற்ற தியேட்டர்களில் படத்தைப் பார்க்க முன்பதிவு செய்து வருகின்றனர். குறித்த நேரத்தில் பிரதியை வழங்கத் தவறிய தயாரிப்பு நிறுவனத்தை அமெரிக்க விஜய் ரசிகர்கள் குறை கூறி திட்டி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…