பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்
மே 19, 2023
Advertisement
சென்னை:ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை வசந்தா. இன்று(19 ம் தேதி) மாலை 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். 82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், "இரவும் பகலும்" படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் , "கார்த்திகை தீபம்" படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். "மூன்றாம் பிறை" படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, "ராணுவ வீரன்" படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.
மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். திரை உலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை (மே-20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!